எங்கள் பார்வை

"திருப்தியான பொது சேவை, சிறந்த பிரதேச செயலகம்"

எங்கள் நோக்கம்

"அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப மக்களை அபிவிருத்திசெய்வது, பிதேசத்தியலுள்ள பௌதீக மற்றும் மனித வளங்களை திறமையாகவும் திறனாகவும் பயன்படுத்துதல்"

.தெஹியத்தகண்டிய பிரதேச செயலகப் பிரிவின் வரலாறு

தெஹியத்தகண்டிய பிரதேச செயலகம் மகாவலி சி வலயத்தினுடைய ஒரு பகுதியாகும்.இது 38 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கொழும்புக்கு 228 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் அம்பாறை மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணத்தி அமைந்துள்ளது. தெஹியத்தகண்டிய பிரதேச செயலகப் பகுதி 347.08 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. இது வடக்கில் பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல பிரதேச செயலகப் பிரவையும், கிழக்கில் பதியந்தலாவ பிரதேச செயலகப் பிரிவையும் மதுரு ஓயா தேசிய பூங்காவையும்,மேற்கில் மஹியங்னை பிரதேச செயலகப் பிரிவையும் தெற்கில் மகாவலி கங்கயையும் மாத்தளை மாவட்டத்தினுடைய வஸ்கமுவ தேசிய பூங்கவையும் கொண்டுள்ளது. தெஹியத்தகண்டிய பிரதேச செயலக பிரிவில் 46 கிராமங்கள் உள்ளன.

இந்த பிதேசத்தில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இருந்து மக்கள் குடியேற்றம் இருந்ததற்கு நாமல்கமவில் ஆய்வுசெய்யப்பட்ட நிலமும், முவபெடிகவெல பிசகொடுவ தொல்பொருள் தளமும் வடஹேனானிகல பங்சவாச சம்பிரதாய விகாரையும் ஆதாரங்கள் ஆகும்.அதன்பிறகு கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் துட்டகைமுனு அரசன் அநுராதபுரத்துக்கு சென்ற பயணத்தில் இங்கே இராணுவத்தை அமைத்ததாக மகா வம்சத்தில் கூறப்படுகிறது. ஹேனானிகல  மத்தியில்  பழைய குடியிருப்புகள் இருந்ததாக ஆர்.எல்.ஸ்பிடிலின் குறிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் இந்த குடியிருப்புகள் பற்றி சரியான குறிப்புகள் இன்மையால் ஒழுங்காக ஆராய்ச்சி செய்ய  முடியாததால் தொன்மை கொள்ளையாளர்களால் அழிக்கப்பட்டுள்ளன. கிமு. 5 ஆம் நூற்றாண்டில் தற்கால குடாகல கலைப்படைப்புகள் சிறிய சிகிரியாவில் கற்க்கையில் உள்ளன. இந்த கலைப்படைப்புகள் சுவர் ஓவியங்ளை ஒத்ததென்று 1960 களில் இஙகே வந்து ஆராய்ச்சி செய்த செனரத் பரணவிதான அறிவித்துள்ளார்.

1986 முதல் பணிபுரிந்த பிரதேச செயலாளர்கள்

பெயர் இருந்து வரை
திரு. துமிந்த ஜயரட்ன.           1986 1987
திரு. எச்.எல்.எஸ் விஜேசிங்க    1987.03.02 1996.07.30
திரு.திஸ்ஸ கருணாரட்ன           1996.08.03 2002.03.14
திருமதி டீ.வீ.டீ.டீ.எஸ்.கருணாரத்ன       2002.03.14 2006.10.31
திரு. டபிள்யு.ஜி.எம் ஹெமந்த குமார. 2006.11.30 2013..11.29
திருமதி டி.ஆர்.கே.கெண்ணாயக. 2013.11.28 2016.02.26
திருமதி எம்.பி.டபிள்யூ. ஷிரோமணி. 2016.02.26 வரை இப்போது



News & Events

18
செப்2026
දිට්වා සුළි කුණාටුවෙන් නිවාස අහිමිවූවන් නැවත පදිංචි කිරීමේ වැඩසටහන

දිට්වා සුළි කුණාටුවෙන් නිවාස අහිමිවූවන් නැවත පදිංචි කිරීමේ වැඩසටහන

දිට්වා සුළි කුණාටුවෙන් නිවාස අහිමිවූවන් නැවත පදිංචි...

07
செப்2026
PROCUREMENT OF WORKS DS-Dehiattakandiya

PROCUREMENT OF WORKS DS-Dehiattakandiya

The Chairman, Regional Procurement Committee (RPC), on...

குடியுரிமை சாசனம்

Scroll To Top